நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) நடந்த நீண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு The National Technical Advisory Group on Immunization (NTAGI) நேற்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசித் திட்டத்தின் செயல்பாடு, கூடுதல் டோஸ், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாததால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/338aesr