மூத்த தேசிய இந்தி பத்திரிகையாளரான வினோத் துவா(67) நேற்று காலமானார். என்டிடிவின் முன்னாள் பத்திரிகையாளரான இவர், உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பிரபல தொலைக்காட்சி தனியார் ஊடகமான என்டிடிவியின் துவக்கக் காலத்தில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர் வினோத் துவா. இவர் தொகுத்து வழங்கிய ’வினோத் துவா லைவ்’, ‘ஜைக்கா இந்தியா’ ஆகிய நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது. இதற்கு முன் அவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடத்தி வந்த ‘ஜனவானி’ நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இவர் தான் தேர்தல் சமயங்களில் கணிப்புகள், விவாதங்களை தொகுத்து வழங்கிய முதல் பத்திரிகையாளராகக் கருதப்படுகிறார்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lD1pNz