டெல்லிக்கு அருகில் உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மதுரா, கிருஷ்ண ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணன் கோயிலை ஒட்டியபடி, 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கியான்வாபி ஷாயி ஈத்கா மசூதி உள்ளது. அங்கிருந்த பழமையான கிருஷ்ணன் கோயிலை இடித்துவிட்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அதன் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்டியதாக வரலாறு கூறுகிறது.

இதனால், மசூதியின் நிலத்தை கோயிலுக்கு அளிக்க வேண்டும் என்று பல ஆண்டு களாக இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அயோத்தியின் பாபர் மசூதி இடிப்புக்கு பின் மத்திய அரசால் ‘புனிதத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991’ இயற்றப்பட்டது. அதன்பின் அப்பிரச்சினை அடங்கிப் இருந்தது. இதன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் அந்த சட்டத்தின் காரணமாக நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DtJoY2