பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின்பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பூனைகளையும் பரிசாக வழங்கியதாகஅமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டுகைது செய்யப்பட்டனர். அந்தவழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரதுமனைவி லீனா மரியா பால் உட்பட8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ggnk5g