தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜோவத் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், இன்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தின் புரியில் கரையை கடக்கவுள்ளது.

இதனிடையே, இந்தப் புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இருந்தபோதிலும், அது கரையை கடக்கும் சமயத்தில் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக் கூடும் என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை, பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து தங்க வைத்து வருகின்றனர்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DqbtPW