அசாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத் தலைநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது லக்கிமிபதார் கிராமம். இது நாகாலாந்தின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியாக உள்ளது. இங்கு இணையதள வசதி கிடையாது. அத்துடன், அடர்ந்த காடு என்பதால், அரசு அதிகாரிகளால் அவ்வளவு எளிதில் அந்தப் பகுதியை அடைவது கடினம்.

லக்கிமிபதார் கிராமம் மற்றும் அதை சுற்றிலும் உள்ள பல்வேறு பழங்குடியினத்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குகின்றனர். இந்நிலையில், பிரதமரின் வீடு தேடி தடுப்பூசி (ஹர் கர் தஸ்தக்) திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறை அதிகாரிகள் நர்ஸ்கள் கடந்த வெள்ளிக்கிழமை அந்த கிராமத்தை அடைந்தனர். அங்கிருந்த அகோனி சோனோவல் என்ற 107 வயது மூதாட்டிக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி செலுத்தினார். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3orhveZ