உத்தர பிரதேசத்தில் அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள், பாதுகாப்பு படை தலைவர்களின் 3 நாள் தேசிய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றார். உ.பி. வந்த அவருக்கு அங்கு பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

உ.பி.யில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் சுமார் 40 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் டிஜிபிசைலேந்திர பாபு மற்றும் தமிழகதலைமைச் செயலர் வே.இறையன்பு ஆகியோர் அளித்த ஊக்கத்தால் உயர் அதிகாரிகளானவர்கள். இவர்களில் பலர் முதல் முறையாக கடந்த வாரம் வியாழன் அன்று லக்னோ வந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை ஒன்று கூடி வரவேற்றனர்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30X6wRa