கேரள மாநிலத்தை உலுக்கிய, மனைவியைக் கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கடிக்கவைத்துக் கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வேறு இரு வழக்குகளில் 17 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொல்லம் மாவட்டம், அஞ்சல் நகரைச் சேர்ந்தவர் சூரஜ். இவரின் மனைவி உத்ரா. திருமணத்தின்போது, வங்கி ஊழியரான சூரஜுக்கு வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம், 100 சவரன் நகை, நிலம் என உத்ரா குடும்பத்தினர் வழங்கினர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. இந்நிலையில் மனைவியை இயற்கையான முறையில் மரணம் நிகழச் செய்து, மனைவியின் நகைகள், பணத்தை அபகரிக்க சூரஜ் திட்மிட்டார், 2-வது திருமணம் செய்யவும் எண்ணினார்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YJzaEe