நாடுமுழுவதும் அக்டோபர் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் 100 சதவீதம் இயக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YIDvYj