காபூலில் சிக்கி தவித்த 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். தஜிஸ்கிஸ்தான் மற்றும் தோஹா வழியாக அடுத்தடுத்து விமானங்கள் இயக்ககப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. இந்தி விமானப்படை விமானம் மூலம் காபூலில் இருந்து நேற்று காலை 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Wa5HSO