காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுலும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: இந்தியாவில் ஜனவரி மாதம் கரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. அப்போது தடுப்பூசியின் செயல் திறன் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர். தற்போது அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TWIkeq