இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 4-வது நாளாக இன்றும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,403 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா 2-வது அலை இந்தியாவைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை தற்போது சில நாட்களாகத் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,702 ஆக உள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gbwSE9