கர்நாடக மாநிலத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும், தொற்று குறைவான பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 3 முறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. எனினும், 11 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TmMdsx